searchbox

தமிழ் சினிமா செய்திகள்

logo

Sunday, April 14, 2013

Home » , , , , , » நடிகை அஞ்சலி கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மாயமானார்

நடிகை அஞ்சலி கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மாயமானார்

நடிகை அஞ்சலி கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். அவரை காணவில்லை என ஐதராபாத் போலீசில் அவரது சகோதரர் ரவிசங்கர் புகார் செய்தார். அதன் பேரில் ஐதராபாத் போலீசார் அஞ்சலியை தேடத் தொடங்கினர்.

இதனால் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத் போலீசில் நடிகை அஞ்சலி ஆஜராகி தான் மாயமானது குறித்து விளக்கம் அளித்தார். மன அழுத்தம் காரணமாக ஓய்வு எடுப்பதற்காக தலைமறைவாக இருந்ததாகவும், தன்னை யாரும் கடத்தவில்லை எனவும் கூறினார்.

அஞ்சலி மாயமானதற்கு முன்னதாக அவரது சித்தி பார்வதி தேவி பற்றியும், டைரக்டர் களஞ்சியம் பற்றியும் பரபரப்பு புகார்களை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். சித்தியும், டைரக்டர் களஞ்சியமும் சேர்ந்து தங்களது கட்டுப்பாட்டில் என்னை வைத்துகொள்ள நினைக்கிறார்கள், எனது சொத்துக்களையும் அபகரித்து விட்டனர், அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த டைரக்டர் களஞ்சியம் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் அஞ்சலி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். மேலும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் செய்தார்.

இந்தநிலையில் நாகர்கோவிலில் இன்று மாலை நடைபெறும் தமிழர் நலம் பேரியக்கத்தின் சார்பில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த டைரக்டர் களஞ்சியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நடிகை அஞ்சலி பிரச்சினையை பொருத்தமட்டில் குடும்ப பிரச்சினை காரணமாக அவர் வீட்டை விட்டு ஓடிச்சென்று தனது சித்தி, சித்தப்பா மீது புகார் தெரிவித்துள்ளார். என் மீது அவர் சுமத்தியுள்ள புகார் வியப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்துகிறது. 
Share this article :

Post a Comment